அந்த நடிகர் கூட நடிப்பது அதிர்ஷ்டம்! மீனாட்சி சவுத்ரி ஓபன் டாக்!
நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது விஜய்க்கு ஜோடியாக தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிவருகிறார். இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, அஜ்மல் அமீர், யோகி பாபு, உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான மூன்று லுக் போஸ்டர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. போஸ்டர்களுக்கும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
விரைவில் இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், மீனாட்சி சவுத்ரி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார்.
யார் மனதையும் புண்படுத்த அல்ல! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சந்தானம்!
அப்போது தி கோட் படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் என்னுடைய இதயம் வேகமாக அடித்தது. ஏனென்றால், விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்று பல நடிகைகளை போல எனக்கு ஒரு கனவு எனவே அந்த மாதிரி வாய்ப்புகள் எல்லாம் யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைப்பது அல்ல.
எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது நான் அதிர்ஷ்டம் என்று தான் சொல்வேன். அவருக்கு ஜோடியாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததால் அதிர்ஷ்டசாலி என்று பலரும் சொன்னார்கள். படத்தின் படப்பிடிப்பில் விஜய் எப்படி அனைவரிடமும் பேசுகிறார் எவ்வளவு அன்பாக இருக்கிறார் என்பதனை பற்றி வார்த்தைகளால் சொல்லவே முடியாது. படம் வெளியான பிறகு கண்டிப்பாக நிறையவே சொல்வேன்” எனவும் மீனாட்சி சவுத்ரி கூறியுள்ளார்.