லிப் லாக் காட்சியா? கமல் படத்தால் கதறி அழுத மீனா!

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், மீனா, ஜெமினி கணேசன், கே. எஸ்.ரவிக்குமார், ஹீரா ராஜகோபால், எஸ்.பி.பாலசுப்ரமணியம், நாசர், கிரேசி மோகன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அவ்வை சண்முகி”.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை மீனா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது கண்கலங்கி கதறி அழுத சம்பவம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அவ்வை சண்முகி படத்தின் கதை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நடிகை சிம்ரன் மகன்களை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்!
அதனால் படத்தில் நடிக்க நான் சம்மதம் தெரிவித்தேன். பிறகு படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருந்த நிலையில், படத்தில் முத்தக்காட்சி இருப்பதாக என்னிடம் படத்தின் உதவி இயக்குனர் வந்து சொன்னார். அந்த காட்சியில் நடிக்கவே எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. எனவே கேரவனுக்கு சென்று என்னுடைய அம்மா மடியில் படித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தேன்.
முத்தக்காட்சி வேண்டாம் என்று இயக்குனரிடம் சொல்லுங்கள் என உதவி இயக்குனரிடம் சொல்லி அனுப்பினேன் ஆனால் அதற்கு அடுத்த நாளே வந்து கமல்ஹாசன் சார் படத்தில் முத்தக்காட்சி எல்லாம் எதுவும் இல்லை என்று கூறிவிட்டார் அதன் பிறகு தான் எனக்கு நிம்மதியே வந்தது. படத்திலும் நடித்து கொடுத்தேன்” எனவும் நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025