விஜய் ஆண்டனி : தமிழ் சினிமாவில் சமீபத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த விஷயங்களில் ஒன்று இயக்குனர் ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் பற்றி பேசி இருந்தது தான். அவர் விஜய் ஆண்டனியை வைத்து இயக்கி இருந்த ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்போது மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று கொண்டு வருகிறது.
இந்த படம் வெளியான சமயத்தில் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் வீடியோ ஒன்றை வெளியீட்டு ” மழை பிடிக்காத மனிதன் படத்தின் முதல் காட்சியை பார்த்தேன. அதில் முதல் வரும் ஒரு நிமிடம் ஒரு காட்சி நான் இயக்கவே இல்லை. படத்தில் அந்த கட்சியை யார் வைத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
படத்தின் சுவாரஸ்யமே, ஹீரோ விஜய் ஆண்டனி யார் என கேள்வியை ரசிகர்கள் மனதில் எழுப்பி இறுதியில் அந்த சஸ்பென்ஸை அவிழ்ப்பது. நான் அப்படி யோசித்து வைத்து இருந்த அந்த முதல் ஒரு நிமிட காட்சியில் ஒரு காட்சி வைத்து அதில் விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தை பற்றி கூறிவிட்டனர். இப்படி செய்தால் இந்த படத்தை ஒரு ரசிகர் எப்படி சஸ்பென்ஸோடு பார்ப்பார்கள்.?
படத்திற்கு சென்சார் எல்லாம் முடிந்த பிறகு இப்படியான ஒரு காட்சியை இயக்கி வைக்கும் உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது.? என்று எனக்கு தெரியவில்லை. இந்த நேரத்தில் நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. ரசிகர்கள் முதல் ஒரு நிமிட காட்சியை மறந்து விட்டு படத்தை பாருங்கள்” என கூறியிருந்தார்.
இவர் பேசியது விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், ஒரு வேலை படத்தின் ப்ரமோஷனுக்காக அவர் இப்படி பேசினாரா என கேள்விகளை எழுப்ப தொடங்கினார்கள். இந்த நிலையில், விஜய் மில்டன் முன் வைத்த குற்றச்சாட்டுக்கு விஜய் ஆண்டனி பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் கூறியதாவது “மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இனணத்து உள்ளதாக, என் நண்பர், படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை இது சலீம் 2 இல்லை” என விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…