மழை பிடிக்காத மனிதன் விவகாரம்: விஜய் மில்டனுக்கு விஜய் ஆண்டனி சொன்ன பதில்?

vijay milton and vijay antony

விஜய் ஆண்டனி : தமிழ் சினிமாவில் சமீபத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த விஷயங்களில் ஒன்று இயக்குனர் ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் பற்றி பேசி இருந்தது தான். அவர் விஜய் ஆண்டனியை வைத்து இயக்கி இருந்த ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்போது மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று கொண்டு வருகிறது.

இந்த படம் வெளியான சமயத்தில் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் வீடியோ ஒன்றை வெளியீட்டு ” மழை பிடிக்காத மனிதன் படத்தின் முதல் காட்சியை பார்த்தேன. அதில் முதல் வரும் ஒரு நிமிடம் ஒரு காட்சி நான் இயக்கவே இல்லை. படத்தில் அந்த கட்சியை யார் வைத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

படத்தின் சுவாரஸ்யமே, ஹீரோ விஜய் ஆண்டனி யார் என கேள்வியை ரசிகர்கள் மனதில் எழுப்பி இறுதியில் அந்த சஸ்பென்ஸை அவிழ்ப்பது. நான் அப்படி யோசித்து வைத்து இருந்த அந்த முதல் ஒரு நிமிட காட்சியில் ஒரு காட்சி வைத்து அதில் விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தை பற்றி கூறிவிட்டனர். இப்படி செய்தால் இந்த படத்தை ஒரு ரசிகர் எப்படி சஸ்பென்ஸோடு பார்ப்பார்கள்.?

படத்திற்கு சென்சார் எல்லாம் முடிந்த பிறகு இப்படியான ஒரு காட்சியை இயக்கி வைக்கும் உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது.? என்று எனக்கு தெரியவில்லை. இந்த நேரத்தில் நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. ரசிகர்கள் முதல் ஒரு நிமிட காட்சியை மறந்து விட்டு படத்தை பாருங்கள்” என கூறியிருந்தார்.

இவர் பேசியது விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், ஒரு வேலை படத்தின் ப்ரமோஷனுக்காக அவர் இப்படி பேசினாரா என கேள்விகளை எழுப்ப தொடங்கினார்கள். இந்த நிலையில், விஜய் மில்டன் முன் வைத்த குற்றச்சாட்டுக்கு விஜய் ஆண்டனி பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் கூறியதாவது “மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இனணத்து உள்ளதாக, என் நண்பர், படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை இது சலீம் 2 இல்லை”  என விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்