பிக் பாஸ் 7 -வது சீசன் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் மணி சந்திரா,விஜய் வர்மா, நடிகை வினுஷா தேவி,நடிகை விசித்ரா,பூர்ணிமா ரவி , ராப்பர் நிக்சன்,எழுத்தாளர் பவா செல்லதுரை, நடிகை அக்ஷயா உதயகுமார், ஐஷு, அனன்யா ராவ், ஜோவிகா, நடிகர் சரவணா, சீரியல் நடிகை ரவீனா தாஹா, நடிகை மாயா கிருஷ்ணன், சீரியல் நடிகர் விஷ்ணு, பாடகர் யுகேந்திரன், நடிகர் பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.
இவர்கள் எல்லாம் கலந்துகொண்டு முதல் நாளே பிக் பாஸ் நிகழ்ச்சி விறு விறுப்பாக இருந்தது என்றே கூறலாம். குறிப்பாக வீட்டிற்குள் முதல் ஆளாக நுழைந்த கூல் சுரேஷ் தன்னுடைய பிரபலமான வசனமான வெந்து தணிந்தது காடு பிக் பாஸ்-க்கு வணக்கத்தபோடு என்ற வசனத்துடன் வீட்டிற்குள் சென்றார்.
அதன் பிறகு வந்த பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, உள்ளிட்டோர் வந்து கேப்டன் பதவிக்கு வாக்கு வாதம் நடத்தினார்கள். முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் சற்று சல சலப்பு கிளம்பியபடி, இருந்தது. இறுதியில் எந்த ஒரு வாக்கு வாதமும் இல்லாமல் அமைதியாக அனைவரும் தூங்கினார்கள்.
வழக்கமாக பிக் பாஸ் ஒவ்வொரு சீசனிலும் எதாவது இரண்டு பேர் காதலிப்பதும் அவர்கள் குறித்த கிசு கிசுவும் பரவுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் மணி மற்றும் ரவீனா இருவருக்கும் ஸ்க்ரிப்டு ரெடி என ரசிகர்கள் கிசு கிசுவை கிளப்ப தொடங்கிவிட்டனர்.
மணி மற்றும் ரவீனா இருவருமே பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்பே நல்ல நண்பர்களும் கூட, இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று நடனம் ஆடி அதற்கான வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு இருந்தார்கள். எனவே, இதனை பார்த்த பலரும் ஒருவேளை அப்படி இருக்குமோ? என்பது போல கூறி வருகிறார்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…