mankatha [File image]
மங்காத்தா : தமிழ் சினிமாவில் அவ்வளவு எளிதில் அஜித்தின் 50-வது படமான மங்காத்தா படத்தை யாரும் மறந்துவிட முடியாது என்றே சொல்லலாம். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து இருந்தார். அர்ஜுன், ராய் லட்சுமி, பிரேம்கி, வைபவ், மஹந்த் ராகவேந்திரா, அஞ்சலி, ஆண்ட்ரே, அஷ்வின் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.
படம் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான நிலையில், வருடங்கள் கடந்தும் பலருடைய பேவரைட் படமாக இருக்கிறது. பலருடைய எதிர்பார்ப்பு இந்த படத்தின் 2-வது பாகம் உருவாகுமா என்று தான். அதற்கு கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது என்பது போல ஒரு புகைப்படம் தான் தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
மங்காத்தா படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து கோட் படத்தினை இயக்கி வருகிறார். அதே சமயம் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அஜர்பாஜன் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில், அஜித், த்ரிஷா மற்றும் விடாமுயற்சி படக்குழுவினரை வெங்கட் பிரபு சந்தித்துள்ளார்.
ஏற்கனவே, இவர்களுடைய புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், தற்போது ஒரு புகைப்படத்தை த்ரிஷா வெளியீட்டு இருக்கிறார். புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஒரு வேளை மங்காத்தா 2 படமாக இருக்குமோ? எனவும் அல்லது கோட் படத்தில் த்ரிஷா கேமியோ கதாபாத்திரமோ என குழப்பத்துடன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…