பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்களை கடந்திருக்கும் நிலையில், போட்டி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்ட இன்னும் 1 மாதத்திற்கு மேல் இருக்கும் நிலையில், போட்டியாளர்களுக்கு இடையே வாக்கு வாதம் கடுமையாக வெடித்து வருகிறது. அதைப்போல, ட்ரோல் செய்யப்படும் விஷயங்களும் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சமீபத்தில் ஜோவிகா தன்னுடைய பெயரை தமிழில் தவறாக ‘ஜேபவிகா’ என்று எழுதி இருந்தார். இதனை பார்த்த பலரும் சரியாக படித்திருந்தால் சரியாக எழுதி இருக்கலாம் என்பது போல ட்ரோல் செய்தனர். இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் பெரிய வாக்கு வாதாமே வெடித்துள்ளது.
வேறு யாருக்கும் இல்லை தினேஷ் மற்றும் பூர்ணிமா இருவருக்கும் தான். இந்த வாரம் போட்டியாளரால் தங்களுக்குள் மாற்றி மாற்றி கையிற்றால் கட்டிக்கொண்டு இருக்கவேண்டும் என்பது போல டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மாயா மற்றும் தினேஷ் ஆகியோர் தங்களுடைய கைகளை கட்டிக்கொண்டு இருந்தார்கள்.
எப்பவும் தூக்கம் தான்! தமிழில் பெயரை தப்பாக எழுதிய வனிதா மகள் ஜோவிகா!
அப்போது பேசிக்கொண்டிருந்த தினேஷ் திடீரென மாயா கையில் சொல்லாமல் கொள்ளாமல் கயிற்றை கட்டினார். இதனால் சற்று கடுப்பான மாயா பேசிகிட்டு இருக்கும்போது எதற்கு இப்படி செய்கிறார்? அவர் போக்குக்கு கயிற்றை கட்டிக்கொண்டு இழுக்கிறார் என்று கூறுகிறார். பிறகு இருவருக்கும் இடையே வாக்கு வாதம் பெரிதாக வெடிக்க என்னை தொட உங்களுக்கு எந்த உரிமையையும் இல்லை என மாயா கத்த தொடங்குகிறார்.
பிறகு தினேஷ் ஒழுங்கா கயிற்றை கட்டு என்று கூறுகிறார். பிறகு கட்ட முடியாது என்பது போல கயிற்றை வீசி விட்டு மாயா தினேஷை பார்த்து நான்சென்ஸ் என்று கூறுகிறார். இதனால் கடுப்பான தினேஷ் யாரு நான்சென்ஸ்? நீதான் நான்சென்ஸ் என்று பதிலுக்கு கூறினார். பிறகு சண்டை போட காரணம் கிடைத்து விட்டதால் நீ சந்தோச படாத என்று தினேஷ் கூற அதற்கு மாயா நீங்க பேசாதீர்கள் உங்கள் மீது கப்பு அடிக்கு என்பது போல பதில் கூறினார்.
இதனால் கடுப்பான தினேஷ் நீ முதலில் 4 வாட்டி குளி உன் மீது ரொம்பவே கப்பு அடிக்கிறது என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் எழுந்த நிலையில் நிக்சன் தலையிட்டு கயிற்றை சரியாக கட்டிவிட்டு வாக்கு வாதத்தை முடித்து வைத்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…