மாவீரன் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் முதல் நாள் வசூல் பட்டையை கிளப்பியுள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கிய ‘மாவீரன்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். படம் வெளியான முதல் நாளிலே மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
முதல் நாளான நெற்றிலிருந்தே பாசிடிவ் விமர்சனம் கிடைத்து வருகிறது. அந்தவகையில், திரையரங்குகளிலும் ரசிகர்கள் குவிந்த வண்ணமே உள்ளனர். தற்போது, வெளியான முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.9 கோடி முதல் 10 கோடி வரை வசூலித்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ரூ.35 கொடியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ஒரே நாளில் 10 கோடி என்று கணக்கிட்டால் வெறும் மூன்றே நாளில் படத்தின் பட்ஜெட்டை படக்குழு ஈஸியாக எடுத்து விடும். சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்னதாக வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் இப்படி தான் ஒரு நாளைக்கு ரூ.10 கோடி என்ற கணக்கில் வசூல் செய்து ரூ.100 கோடி வசூல் செய்து இரு படங்களும் ஹிட் அடித்தது.