மாவீரன் படப்பிடிப்பு தொடக்கம்…சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிதி ஷங்கர்.!
இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் இரவு நேரத்தில் மட்டுமே நடந்து வருகிறது. மேலும், படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் மடோன் அஷ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக வதந்தி தகவல் இணையத்தில் பரவியது.
பிறகு இயக்குனர் தரப்பில் இருந்து எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும், படத்தின் படப்பிடிப்பு நின்றது உண்மை என்றும் ஆனால் அது மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக தான் நிறுத்திவைக்கப்பட்டது என்று கூறப்பட்டது.
இதையும் படியுங்களேன்- ஓவராக ஆடிய ‘வாரிசு’ நடிகர்.? சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து தடாலடியாய் தூக்கிய இயக்குனர்.!
இந்த நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படத்தின் நாயகி அதிதி சங்கர் தெரிவித்துள்ளார். அதற்கான புகைப்படம் ஒன்றையையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பும், ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.