ஆங்கில தொலைக்காட்சி தொடரான “பிரண்ட்ஸ்” -ல் நடித்ததன் மூலம் பிரபலமான மேத்யூ பெர்ரி காலமானார்.
டேவிட் கிரேன் மற்றும் மார்த்தா காஃப்மனால் ஆகியோர் உருவாக்கிய பிரபல ஆங்கில தொலைக்காட்சி தொடரான “பிரண்ட்ஸ்” ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. 1994-ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த தொடருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதில் சாண்ட்லர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் நடிகர் மேத்யூ பெர்ரி.
இவர் இந்த சாண்ட்லர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில், 54 வயதாகும் மேத்யூ பெர்ரி நேற்று உயிரிழந்துவிட்டதாக ஆங்கில ஊடகங்கள் செய்தியாகளை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மேத்யூ பெர்ரி வசித்து வந்தார்.
நேற்று (சனிக்கிழமை) தன்னுடைய வீட்டில் இருக்கும் குளியலறையில் அவருடைய உடல் இருந்ததாகவும் பிறகு அவருக்கு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டாராம். இவர் எப்படி மரணமடைந்தார் என்பதற்கான சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இருப்பினும் பல ரசிகர்களை கொண்டுள்ள மேத்யூ பெர்ரி திடீரென மரணமடைந்துள்ளதாக வெளியான தகவலை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி சோகமடைந்துள்ளார்கள். இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும், மேத்யூ பெர்ரி சில்வர் ஸ்பூன்ஸ், ஹூ ‘ஸ் தி பாஸ்? உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …