#MatthewPerry : ‘F.R.I.E.N.D.S ’ புகழ் மேத்யூ பெர்ரி காலமானார்!

#MatthewPerry

ஆங்கில தொலைக்காட்சி  தொடரான “பிரண்ட்ஸ்”  -ல் நடித்ததன் மூலம் பிரபலமான மேத்யூ பெர்ரி காலமானார். 

டேவிட் கிரேன் மற்றும் மார்த்தா காஃப்மனால்  ஆகியோர் உருவாக்கிய பிரபல ஆங்கில தொலைக்காட்சி  தொடரான “பிரண்ட்ஸ்”  ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. 1994-ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த தொடருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதில் சாண்ட்லர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் நடிகர் மேத்யூ பெர்ரி.

இவர் இந்த சாண்ட்லர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில், 54 வயதாகும்  மேத்யூ பெர்ரி நேற்று உயிரிழந்துவிட்டதாக ஆங்கில ஊடகங்கள் செய்தியாகளை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மேத்யூ பெர்ரி வசித்து வந்தார்.

நேற்று (சனிக்கிழமை) தன்னுடைய வீட்டில் இருக்கும் குளியலறையில் அவருடைய உடல் இருந்ததாகவும் பிறகு அவருக்கு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டாராம். இவர் எப்படி மரணமடைந்தார் என்பதற்கான சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இருப்பினும் பல ரசிகர்களை கொண்டுள்ள மேத்யூ பெர்ரி திடீரென மரணமடைந்துள்ளதாக வெளியான தகவலை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி சோகமடைந்துள்ளார்கள். இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும், மேத்யூ பெர்ரி சில்வர் ஸ்பூன்ஸ், ஹூ ‘ஸ் தி பாஸ்? உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்