‘மட்ட எங்க வந்து யாருகிட்ட’…மிரட்டல் பீட்டுடன் வெளியான கோட் பாடல்!
கோட் படத்தின் 4-வது பாடல் தற்போது மிரட்டலாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை : விஜய் நடித்து வெளியாக இருக்கும் கோட் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதன்படி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளைப் படக்குழு பக்காகக் கையாண்டு வருகிறது. அதில் ஒரு பங்காக, படத்தின் வேலைகள் இருந்தாலும் சில மணி நேரம் ஒதுக்கி இயக்குநர் ‘வெங்கட் பிரபு’ தனியார் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
மேலும், மறுபக்கம் படத்தின் ட்ரைலர், பாட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிப் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா, அடுத்த கட்டமாகக் கோட் படத்தின் 4-வது பாட்டு நாளை வெளியாகும் என அப்டேட் ஒன்றைக் கொடுத்தார். மேலும், தனக்கு இந்த படத்திலேயே பிடித்த பாடல் என்றால் அது ‘மட்ட’ பாடல் தான் எனத் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து பாடலாசிரியர் விவேக்கும் அவரது எக்ஸ் தளத்தில் இந்த ‘மட்ட’ ஒரு வரி லிரிக்ஸ்ஸை பதிவிட்டு ஹிண்ட் ஒன்றைக் கொடுத்தார். அப்போது முதல் இந்த ‘மட்ட’ என்ற வார்த்தை ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டது. அதிலும், இன்று ‘யுவன் ஷங்கர் ராஜாவின்’ பிறந்தநாள் என்பதால் அந்த நாளில் அவர் இசையமைத்திருக்கும் கோட் படத்தின் 4-வது பாடல் வெளியாவதால் இந்த பாட்டிற்கு ‘வேற லெவல்’ எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.
தற்போது, படக்குழு அறிவித்தது போலக் கோட் படத்தின் 4-வது பாடலான ‘மட்ட’ பாடல் வெளியாகி யூட்யூப்பில் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த அளவிற்கு தரமான பாடலை யுவன் உருவாக்கியிருக்கிறார். மேலும், இந்த பாடல் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ளதால் அவருடைய ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் இணைந்து கொண்டாடி வருகிறார்கள்.
மேலும், கடைசியாகப் படக்குழு வெளியிட்ட ‘ஸ்பார்க்’ பாடலில் விஜயின் டீ-ஏஜிங் அதாவது இளமையான விஜயின் முகத்தில் கன்னம் ஒட்டி இருப்பதாக பல நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், தற்போது வெளியான இந்த பாடலில் விஜயின் டீ-ஏஜிங் அந்த விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் அளவில் இருக்கிறது. மேலும், பாடலாசிரியர் விவேக்கின் துள்ளலான பாடல் வரிகளும், மிரட்டலான யுவன் இசையுடன் கேட்கும் போது திரையரங்கில் இந்த பாடல் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.