தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில், படத்தின் திரை விமர்சனம் இதோ.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், இப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களை பெரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த படத்தில் தளபதி விஜய் ஒரு கல்லூரியில் குடிகார ஆசிரியராக பணிபுரிகிறார். அதன்பின், அங்கு பிரச்சனைகள் ஏற்பட கல்லூரியிலிருந்து விஜய் வெளியேற்றப்படுகிறார். அதன்பின் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வாத்தியாராக விஜய் நியமிக்கப்படுகிறார். அப்பள்ளியில் விஜய் சேதுபதி சிறுவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து, சிறுவர்களை சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்.
அங்கு, விஜய்க்கும், விஜய் சேதுபதிக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதனை அடுத்து அத்துமீறும் விஜய் சேதுபதியை, விஜய் எப்படி அடக்குகிறார் என்பதுதான் இப்படத்தின் மீதமுள்ள கதை. நடிகர் விஜய் JD என்னும் வாத்தியாராக தான் இப்படத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் மாசான வாத்தியாராக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.
மேலும், வாத்தி கம்மிங் பாடலில் விஜய் நடனம் ஆடும் விதம் ரசிகர்களை பெருமளவில் ஆரவாரத்தில் ஆழ்த்தியுள்ளது. கொடூர வில்லனாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதிக்கு இணையாக விஜய்க்கும் இனியன காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய் மற்றும் விஜய் சேதுபதி பயன்படுத்தி லோகேஷ் கனகராஜ் படத்தை கையாண்டுள்ள விதம் திறம்பட உள்ளது. இப்படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு தான் படத்தின் பிளஸ் ஆக அமைந்துள்ளது. சாந்தனு, மகேந்திரன் அர்ஜுன் தாஸ் என மற்ற பிரபலங்களும் தங்களது பங்கை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியுள்ளன.
ஆண்ட்ரியா படத்தில் முக்கியமான மூன்று ரோல்களில் தான் வருகிறார். படத்தின் மிகப்பெரிய பலமே சண்டை காட்சிகள் மற்றும் ஸ்டண்ட் காட்சியில் தான்.படத்தின் முதல் பாதி கொஞ்சம் நீளம் என்றாலும், ஆட்டம் பாட்டம், சண்டை என பரபரப்பாக செல்கிறது. இரண்டாம் பாதி பாசிட்டிவாக தொடங்கி, அடுத்தடுத்த காட்சிகள் சற்று சோர்வை தருவதாகத் தெரிகிறது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…