ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ்.? கார்த்திக் சுப்புராஜின் மாஸ்டர் பிளான்.!!
கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா , சித்தார்த், குரு சோமசுந்தரம், லட்சுமி மேனன், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜிகர்தண்டா”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது.
இந்த படத்தை பைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசைமைத்திருந்தார். படம் வெற்றி பெற்றதை போல் படத்திலுள்ள பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஆம், விரைவில் ஜிகர்தண்டா 2 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ளதாம்.
அந்த படத்தில் நடிகர் ராகவ லாரன்ஸ் மற்றும் மற்றோரு பெரிய நடிகரும் நடிக்கவுள்ளராம். மேலும் இரண்டாம் பாகத்தையும் தயாரிப்பாளர் கதிரேசனே தயாரிப்பதாகவும் தகவல்கள் தீயாக பரவி வருகிறது.
மேலும் நடிகரும் நடன இயக்குனருமான ராகவ லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தாக சந்திரமுகி 2 மற்றும் அதிகாரம் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.