ராபர்ட் மாஸ்டருடன் திருமணமா? விளக்கம் கொடுத்த வனிதா!

வனிதா இயக்கி நடிக்கும் MR&MRS திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் நடன இயக்குநர் ராபர்ட் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

vanitha vijayakumar

சென்னை : நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் ஒன்றாகத் திருமணம் போட்டஸூட் எடுத்ததுபோல புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்கள். இதனைப் பார்த்த பலரும், ஒரு வேலை இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களோ எனக் கேள்வி எழுப்பினார்கள்.

இதன் காரணமாகவே, இருவருக்கும் திருமணம் முடியப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் தீ போலப் பரவியது. அது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் இது படங்களுக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனவும் சிலர் கூறினார்கள். இருப்பினும், இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வைரலாக பரவிய காரணத்தால் தற்போது அதற்கு வனிதா விளக்கம் ஒன்றையும் கொடுத்து இருக்கிறார்.

இப்படியான தகவல் பரவுகிறது இது முற்றிலும், வதந்தியான விஷயம் என்று வெளிப்படையாகக் கூறாமல் இது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் தான் என்பது போலப் படத்தின் ப்ரோமோ ஒன்றை வெளியீட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதன்படி, வனிதா தற்போது இயக்குநராகக் களமிறங்குகிறார். அதாவது, அவர் தற்போது ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடிக்கும் ‘Mrs & Mr’ படத்தினை வனிதா தான் இயக்கி வருகிறார். எனவே, படத்திற்கு ப்ரோமோஷன் வேண்டும் என்ற காரணத்தால் தான் இப்படியான புகைப்படங்களையும், ப்ரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Vanitha (@vanithavijaykumar)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Vittalkumar murder case - Bala Sait and Dharani kumar arrested
Bengaluru - Accident
garam masala (1)
[File Image]
Robin uththappa
smriti mandhana SCORE