நடிகை கியாரா அத்வானியுடன் திருமணமா..? நடிகர் சித்தார்த் விளக்கம்.!
நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும், நடிகை கியாரா அத்வாணி நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வந்ததாக கடந்த சில மாதங்களாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், இருவரும் இந்த ஆண்டு பிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவியது.
அது மட்டுமின்றி, இவர்களுடைய திருமணம் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் பேலஸ் ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாகவும் தீயாக தகவல்கள் பரவியது. ஆனால், உண்மையிலே இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவிக்கவே இல்லை.
இதனால் குழப்பம் அடைந்த பல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்க தொடங்கினார்கள். இதனையடுத்து, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து பரவுவது வெறும் வதந்தி தகவல் என முற்று புள்ளி வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை யாரும் திருமணத்திற்கு அழைக்கவில்லை. இரண்டு முறை நான் தேதிகளைப் படித்தேன், எல்லாவற்றையும் ஒரு கணம் பார்க்கிறேன்.
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மக்கள் ஊகிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். இப்படி வதந்தி தகவலை பரப்புவதற்கும், பார்ப்பதற்கும், பதிலாக என்னுடைய படங்களை பார்த்தாலே போதும்” என தெரிவித்துள்ளார். இதன் மூலம் இது வெறும் வதந்தி தகவல் என தெரிய வந்துள்ளது.