Twitter Review: டைம் மெஷின் கதை ஒர்க் ஆனதா? தடைகளை தாண்டி வெளியான ‘மார்க் ஆண்டனி’ எப்படி இருக்கு?

Mark Antony

நடிகர் விஷால் மற்றும் S.J சூர்யா நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் இன்று வெளியானது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ரிது வர்மாவும், முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஆரம்பத்தில் ஏந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தாலும், ட்ரைலர் வெளியான பிறகு, ட்ரைலரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சிகளும் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. இந்நிலையில், படம் வெளிவதற்கு முன், விஷால் பணம் கொடுக்க வேண்டும் என்று லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்தை வெளியீட சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.

இதனால், படக்குழுவே ஆடி போனது, பின்னர் அதற்கான விளக்கம் கொடுக்கப்பட்ட நிலையில், இறுதியாக படம் வெளியீட அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, இன்று தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் முழுக்க காமெடி, நக்கல், நய்யாண்டி, என போர் அடிக்காமல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை நன்றாக வேலை செய்துள்ளது.

இடையில், வரும் சிலுக்கின் டான்ஸ் காட்சிகள், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அபாரம், படத்தை தனி ஒருவனாக எடுத்து சென்றுள்ளார். டைம் மெஷின் கான்செப்ட் மற்றும் கேங்ஸ்டர் நாடகம் இரண்டுமே நன்றாக வேலை செய்துள்ளது. மேலும், முதல் பாதி மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி புன்னகையுடன் ரசிகர்களை தூக்கி சென்றுள்ளது. கிளைமாக்ஸ் தரமானதாக கொடுத்து இயக்குனர் நேர்த்தியாக இயக்கியுள்ளார். குறிப்பாக, படத்தில் வரும் நகைச்சுவை, அதிரடி காட்சிகளும் பார்வையாளர்களிடையே நன்றாக வேலை செய்துள்ளது.

விஷாலுக்கு இந்த படம் நேர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து குவிந்தால், லத்தி, வீரமே வாகை சூடவும் போன்ற பல தோல்விகளைத் தொடர்ந்து நடிகருக்கு இது கம்பேக் படமாக அமைந்துள்ளது. இப்பொது, திரையரங்குகளில் படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் பலர் தங்கள் விமர்சனங்களை X ( Twitter) தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அதன்படி, படத்தை பார்த்த ஒருவர், ஸ்மாஷ் ஹிட் என்றும் S.Jசூர்யா மற்றும் விஷால்லின் நடிப்பு சூப்பர். மனதைக் கவரும் சண்டைகள் மற்றும் BGM தரம். ஒரு மேட் க்ளைமாக்ஸ் மற்றும் இடைவிடாத பொழுதுபோக்காக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர், சிலுக்கு காட்சியில் மார்க்ஆண்டனி – எஸ்.ஜே.சூர்யா வேடிக்கையான நடிப்பு ஒரு பொழுதுபோக்காக அமைந்துள்ளது. எஸ்.ஜே.சூர்யாவால் மட்டுமே இத்தகைய கதாபாத்திரங்களையும் காட்சிகளில் நடிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருவர், மார்க் ஆண்டனி ஒரு பொழுதுபோக்கு ரெட்ரோ பாணி நாடகம். விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அற்புதமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.


மார்க் ஆண்டனி படத்தில் தளபதி விஜய்க்கு நன்றி என்று டைட்டில் கார்டுடன் படம் தொடங்குகிறது. இயக்குனர் அஜித்குமார் ரசிகர், தளபதி விஜய்க்கு நன்றி அட்டை போடுவது சினிமாவின் அழகு என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர், மார்க் ஆண்டனி படம் வேடிக்கை நிறைந்து காமெடியாக உள்ளது. சுரேஷாட் ஹிட், முதல் பாதி சுமார், ஆனால் 2வது பாதி வேடிக்கை நிறைந்து காணப்படுகிறது. விஷால் நேர்த்தியான நடிப்பு, எஸ்.ஜே.சூர்யா என்ன ஒரு பெர்பார்மர். பாடல்கள் & BGM இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். மொத்தத்தில் இது ஒரு வேடிக்கையான  திரைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர், முதல் பாதி முழு ஆக்‌ஷன் காட்சிகள், இரண்டாம் பாதி நகைச்சுவை மற்றும் அதிரடி காட்சிகள் நிறைந்து பொழுதுபோக்காக அமைந்துள்ளது. படத்தில், எடிட்டிங், எஸ்.ஜே. சூர்யா நகைச்சுவை, விஷால் நடிப்பு, இசை எல்லாமே சூப்பர் இது விஷாலுக்கு காம்பேக் படமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்