முக்கியச் செய்திகள்

Mark Antony Box Office : வசூலில் மேஜிக் பண்ணிய மார்க் ஆண்டனி! உலகம் முழுவதும் எத்தனை கோடிகள் தெரியுமா?

Published by
பால முருகன்

கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த திரைப்படத்தில் சுனில், ரிது வர்மா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கியமான காதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வெளியான முதல் நாளில் இருந்து இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகத்தில் பல திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும் படத்தின் இரண்டாவது பாகத்திற்காக காத்திருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 35 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் நாள் வசூலை விட நாளுக்கு நாள் வசூல் அதை விட அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பது போல தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், 3 நாட்களிலே படம் 35 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில், வரும் நாட்களில் இன்னும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்னும் சில நாட்களிலே படம் 50 கோடி வசூலை நெருங்கி விடும் எனவும் கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்! அதிமுக புறக்கணிப்பு…

சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…

34 minutes ago

தோனியின் ஆவேசம் வீண்.. 4வது முறையாக தொடர் தோல்வி.! சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி..,

பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…

1 hour ago

காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.! யார் இந்த குமரி அனந்தன்?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…

2 hours ago

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

10 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

11 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

12 hours ago