கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். விஜயகாந்தின் உடல் விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, அண்ணாசாலையில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த், ராதா ரவி, பார்த்திபன், லிவிங்ஸ்டன், எம்எஸ்பாஸ்கர், மன்சூர் அலிகான், வாகை சந்திரசேகர், பாக்கியராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நேற்று விஜய், இளையராஜா, பல பிரபலங்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்திக்கொண்டு இருக்கும் நிலையில், இன்னும் நடிகர் வடிவேலு வந்து அஞ்சலி செலுத்தவில்லை. விஜயகாந்திற்கும் வடிவேலுக்கு இடையே மன கசப்பு இருக்கிறது.
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது கண்ணீர் சிந்திய விஜய்!
பல மேடைகளில் வடிவேலு விஜயகாந்தை பற்றி தாக்கியும் பேசி இருக்கிறார். இருந்தும் விஜயகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் வடிவேலுவின் சினிமா வளர்ச்சிக்கு உதவி இருக்கிறார். சின்ன கவுண்டர், தவசி, வல்லரசு, கோயில் காளை, ஏழு ஜாதி உள்ளிட்ட பல படங்களில் தொடர்ச்சியாக நடிக்க வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்தார். விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்த பல படங்கள் வடிவேலுக்கு அடுத்த அடுத்தப்பட வாய்ப்புகளை கொண்டு வர உதவியும் செய்துள்ளது.
வடிவேலு தன்னை பற்றி தாக்கி பேசி இருந்தாலும் வடிவேலுவின் நெருக்கமானவர்களை சந்திக்கும்போது அவர்களுடன் பேசி வடிவேலு என் நடிக்க மாட்டிக்கிறார் அவர் எல்லாம் பிறவி கலைஞன் நடிக்க சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார் என விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவே பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இப்படி வடிவேலுவை பற்றி யோசித்துக்கொண்டு இருந்த விஜயகாந்த் மண்ணைவிட்டு மறைந்துள்ளார். எனவே, அவருடைய மறைவுக்கு வடிவேலு அஞ்சலி செலுத்தவில்லை. ரசிகர்கள் பலரும் வடிவேலு வரவில்லையா? என் கேள்வி எழுப்பியும் வருகிறார்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…