பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அவர் ” நான் என்னுடைய வாழ்க்கையில் பல ஆண்களுடைய வளர்ச்சியை பார்த்திருக்கிறேன்.
ஆனால், அவர்களுடைய வளர்ச்சியை பார்த்து நான் பயந்தது இல்லை. என்னுடைய வெற்றிகளையும், சாதனைகளையும் கண்டு பல ஆண்கள் பயந்திருக்கிறார்கள். அதுபோன்று பயப்படும் ஆண்கள் சுதந்திரத்தை குடும்பத்தின் தலைவராக இருப்பதை பெருமையாகக் கருதுவார்கள்.
ஒரு குடும்பத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வது, சாதனைகள் புரிவதெல்லாம் அவர்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது. என்னுடைய தந்தை ராணுவத்தில்தான் இருந்தார். என்னுடைய அம்மாவும் வேலை செய்து அப்பாவை விடவும் அதிகம் சம்பாதித்தார். அவர்களுக்குள் எந்த கருத்துவேறு பாடும் இல்லை.அப்படி தான் அனைவரும் இருக்கவேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும் நடிகை பிரியங்கா சோப்ரா கடைசியாக The Matrix Resurrections எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது “லவ் அகைன்” ( Love Again) எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…