என்னை பார்த்து பல ஆண்கள் பயந்தார்கள்…கெத்து காட்டும் பிரியங்கா சோப்ரா.!!

Default Image

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அவர் ” நான் என்னுடைய வாழ்க்கையில் பல ஆண்களுடைய வளர்ச்சியை பார்த்திருக்கிறேன்.

ஆனால், அவர்களுடைய வளர்ச்சியை பார்த்து நான் பயந்தது இல்லை. என்னுடைய வெற்றிகளையும், சாதனைகளையும் கண்டு பல ஆண்கள் பயந்திருக்கிறார்கள்.  அதுபோன்று பயப்படும் ஆண்கள் சுதந்திரத்தை குடும்பத்தின் தலைவராக இருப்பதை பெருமையாகக் கருதுவார்கள்.

ஒரு குடும்பத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வது, சாதனைகள் புரிவதெல்லாம் அவர்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது. என்னுடைய தந்தை ராணுவத்தில்தான் இருந்தார். என்னுடைய அம்மாவும் வேலை செய்து அப்பாவை விடவும் அதிகம் சம்பாதித்தார். அவர்களுக்குள் எந்த கருத்துவேறு பாடும் இல்லை.அப்படி தான் அனைவரும் இருக்கவேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் நடிகை பிரியங்கா சோப்ரா  கடைசியாக The Matrix Resurrections எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது “லவ் அகைன்”  ( Love Again) எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்