அப்போ புரியல இப்போ புரியுது! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை வாங்க போட்டி போடும் ஓடிடி நிறுவனங்கள்!

Manjummel Boys

ManjummelBoys மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வெற்றியை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். எங்கு திரும்பி பார்த்தாலும் அந்த படத்தினுடையய தாக்கம் தான் இருக்கிறது என்றே கூறலாம். தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பட்டையை கிளப்பி வருகிறது. இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால்  இயக்கத்தில் வெளியான இந்த படத்தில்  காலித் ரஹ்மான், கணபதி எஸ் பொதுவால், காலித் ரஹ்மான், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பல பிரபலங்கள் பலரும்  முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

Read more- மம்முட்டியை ஓரங்கட்டி ரூ.100 கோடி வசூலித்த மஞ்சும்மெல் பாய்ஸ்! மலையாளத்தில் புதிய சாதனை…

கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை எந்த ஓடிடி நிறுவனம் வாங்க போகிறது எப்போது ஓடிடியில் வெளியாகப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. இதனையடுத்து, படம் வெளியாவதற்கு முன்பு படக்குழு பல ஓடிடி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாம். ஆனால், படத்தில் பெரிய நடிகர்கள் இல்லை.

READ MORE – ஆள விடுங்கப்பா சாமி! கமல்ஹாசன் படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான்?

படத்தை பெரிய இயக்குனர் இயக்கவில்லை என்ற காரணத்தால் படத்தை வாங்க எந்த ஓடிடி நிறுவனமும் முன்வரவில்லையாம். ஆனால், தற்போது இந்த திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், படத்தை வாங்க பல ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு வருகிறதாம். கிட்டத்தட்ட ஆரம்பத்தில் படத்தின் ஓடிடி விலையை கேட்டதை விட 10% அதிக தொகைக்கு படத்தை கேட்டு வருகிறார்களாம். ஆனால், இன்னும் எந்த ஓடிடி நிறுவனத்திற்கு படத்தயாரிப்பு நிறுவனம் விற்கவில்லையாம்.

READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்!

விரைவில் பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்த பிறகு எந்த ஓடிடியில் வெளியாகும் என்பதற்கான ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்