த்ரிஷா – மன்சூர் அலிகான் விவகாரம்: கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்!
நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் த்ரிஷா பற்றி பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் என்ன பேசினார் என்றால் ” லியோ படத்தில் த்ரிஷாவுடன் என்று நடிக்கிறோம் என்றவுடன் ரொம்பவே சந்தோஷபட்டேன். கண்டிப்பா பேட் ரூம் சீன் எல்லாம் இருக்கும் நடித்துவிடலாம் ” என்பது போல சற்று கொச்சையாக பேசி இருந்தார்.
அவர் பேசியதற்கு நடிகை த்ரிஷா ” சமீபத்தில் மன்சூர் அலி கான் என்னைப் பற்றி கேவலமாக பேசிய வீடியோ பார்த்தேன். அவர் பேசியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் இது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு, வெறுப்பு மற்றும் மோசமான அவர் எண்ணத்தை காட்டுகிறது. அவர் ஆசைப்படலாம் ஆனால் நான் அவரைப் போன்ற ஒருவருடன் திரையில் நடித்ததில்லை என்பதற்கு திரைத்துறையினருக்கு நன்றி கூறுகிறேன். இனிமேல் அவருடன் நான் நடிக்க மாட்டேன்” என கூறினார்.
மன்சூர் அலிகானின் ‘ரேப்’ சர்ச்சை கருத்து… கடுப்பான த்ரிஷா.. கண்டித்த லோகேஷ்.!
லோகேஷ் கனகராஜ்
“நாங்கள் அனைவரும் ஒரே குழுவாக படத்தில் பணியாற்றியதால், மன்சூர் அலிகான் கூறிய பெண் வெறுப்புக் கருத்துக்களைக் கேட்டு மனமுடைந்து கோபமடைந்தோம். பெண்கள், சக கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான மரியாதை எந்தத் துறையிலும் பேச்சுவார்த்தைக்குட்படாத ஒன்றாக இருக்க வேண்டும், இந்த நடத்தையை நான் முற்றிலும் கண்டிக்கிறேன்” என கூறியுள்ளார்.
மஞ்சிமா மோகன்
மன்சூர் அலிகான் பேசியதற்கு மிகவும் கோபமடைந்த நடிகை மஞ்சிமா மோகன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” முற்றிலும் அவமரியாதை மற்றும் அருவருப்பானது” என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மாளவிகா மோகனன்
இப்படி பேசியது மிகவும் அருவருப்பானது. இந்த ஆண் பெண்களை இப்படித்தான் பார்க்கிறார் அப்படித்தானே அவர்களைப் பற்றி சிந்திக்கிறார் என்பது வெட்கக்கேடானது. ஆனால் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் இதைப் பற்றி வெளிப்படையாகவும் மன்னிக்காமல் பேசுவதற்குத் துணிவு இருக்கிறதா?
அவமானம். இது நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட கேவலம்” என கூறிஉள்ளர்.
கார்த்திக் சுப்புராஜ்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” அவர் ஒரு கேவலமான மனிதர் வெட்கப்படுகிறேன் மன்சூர் அலிகான்” என மிகவும் காட்டத்துடன் பதிவிட்டுள்ளார்.
குஷ்பூ
சில ஆண்கள் ஒரு பெண்ணை அவமதிப்பது அல்லது அவளைப் பற்றி மிகவும் அவமரியாதையாக பேசுவது அவர்களின் பிறப்பு உரிமை என்று நினைக்கிறார்கள். மன்சூர் அலிகானின் சமீபத்திய வீடியோவை நான் பார்த்தேன். அவரது பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களின் “சும்மா நகைச்சுவைக்கு சொன்னேன்” என்ற அணுகுமுறை கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இல்லை, அது அவ்வாறு செய்யப்படாது. அவர் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பெண் நடிகரிடமும், பொதுவாக பெண்களிடமும் தனது மோசமான, பெண் வெறுப்பு, கீழ்த்தரமான மனநிலையை வெளிப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” என கூறியுள்ளார்.
மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்
த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், மன்சூர் அலிகான் ” ‘அய்யா’ பெரியோர்களே. திடிர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக.
உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஜ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா?
. திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் பெரிய அரசியல்வாதியாக ஆயிட்டாங்க பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும். லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய ரசிகர்ணுன்னு சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும் 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும் சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு… பொழப்ப பாருங்கப்பா…. நன்றி” என விளக்கம் கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.