கோட் சூட்டில் செம்ம ஸ்டைலா இருக்காப்ல மனுசன்.. சீயான் விக்ரமின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!!
நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், நடிகர் விக்ரம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கருப்பு நிற கோட் சூட்டில் செம மாஸ் ஆன சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் கோட் சூட்டில் செம்ம ஸ்டைலா இருக்காப்ல மனுசன் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
John WickRam. pic.twitter.com/e4tSYbWjwt
— Vikram (@chiyaan) April 3, 2023