த்ரிஷா நல்ல நடிகை! நான் ஒன்னும் தண்ணி அடிச்சிட்டு பீச்சுல ஆடல..மன்சூர் அலிகான் பரபரப்பு!
நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியது பெரிய அளவில் சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், அவர் அப்படி பேசியது போல அனைவருடைய முன்னாடியும் மன்னிப்பு கேட்கவேண்டும் என நடிகர் சங்கம் கண்டன அறிக்கையை வெளியீட்டு இருந்தது. இதற்கு தன்னால் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என மன்சூர் அலிகான் பேசினார்.
இதனையடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் ” த்ரிஷா பற்றி நான் பேசிய விவகாரத்தில் நடிகர் சங்கம் தவறு செய்துள்ளது. என்னிடம் எதை பற்றியும் கேட்காமல் எப்படி கண்டன அறிக்கை விடலாம்? 4 மணி நேரத்திற்குள் நடிகர் சங்கம் பதிலளிக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் நடப்பதே வேறு. திரைப்படத்தில் கற்பழிப்பு காட்சி உண்மையானது என்று நினைக்கிறீர்களா? அது உங்களுக்குத் தெரியாதா? இதைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினார்களா?
4 மணி நேரம் கெடு…நடிகர் சங்கத்துக்கு செக் வைத்த நடிகர் மன்சூர் அலிகான்!
மக்களுக்கு என்னை பற்றி தெரியும். என்னைப்பொறுத்தவரை நான் த்ரிஷா பற்றி தவறாக ஏதும் பேசவே இல்லை எனவே எதற்காக நான் மன்னிப்பு கேட்கவேண்டும்? நான் ஒன்னும் பீச் ல போய் தண்ணி அடிச்சிட்டு நடுஇரவில் போய் ஆடவில்லை. என்னை போலீஸ் பிடிக்கவும் இல்லை. நான் யாரையும் குறிப்பிட்டு இதனை சொல்லவில்லை. த்ரிஷா நல்ல நடிகை இன்னும் பெரிய அளவில் வளரட்டும்.
நான் யாரயும் தப்பா ஒண்ணும் சொல்லவில்லை. இந்தச் செய்தி காட்டுத் தீயாக எங்கும் பரவி வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆங்கில நாளிதழிலும் எனது படங்களைப் பார்க்கிறேன். என்னுடைய படத்தை இன்னும் சிறப்பாக போட்டிருக்கலாம். த்ரிஷா தான் கூட படம் நடிக்கமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.
நான் அப்படியெல்லாம் சொல்லமாட்டேன் கண்டிப்பாக அவருடன் இணைந்து அடுத்த படத்தில் நடிப்பேன். ஒரு நடிகனின் கதாபாத்திரமாகத்தான் நான் அப்படி பேசினேன். மற்றபடி, தவறாக ஏதும் சொல்லவில்லை. அந்த காட்சியை சாதாரணமாக சொன்னேன்’ எனவும் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். மேலும், பேட்டி கொடுத்தும் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கவில்லை என பலரும் தங்களுடைய கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.