நடிகை த்ரிஷா சர்ச்சை விவகாரம்: முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு!
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, மன்சூர் அலிகானை கைது செய்து விசாரிக்கலாமா அல்லது விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பலாமா என காவல்துறையினர் ஆலோசித்து வந்தநிலையில், மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக அழைத்து விசாரிக்க சென்னை ஆயிரம் விளக்கு போலீசார், 41a எனப்படும் நோட்டீஸ்-ஐ அனுப்பியுள்ளனர்.
மேலும், அவர் மீது NWC வழக்குப்பதிவு செய்ய DGPக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிக் பாஸ் விட்டு பிரதீப் வெளியே வந்தாலும் அவர் தான் வின்னர்! ஆதரவாக களமிறங்கிய ஹரிஷ் கல்யாண்!
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்து, இன்று விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
மன்சூர் அலிகான் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் ” த்ரிஷா பற்றி நான் பேசிய விவகாரத்தில் நடிகர் சங்கம் தவறு செய்துள்ளது. என்னிடம் எதை பற்றியும் கேட்காமல் எப்படி கண்டன அறிக்கை விடலாம்? 4 மணி நேரத்திற்குள் நடிகர் சங்கம் பதிலளிக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் நடப்பதே வேறு.
ஒரே படத்தில் இணையும் சிம்பு- தனுஷ்? ரொம்ப பயங்கரமான சர்ப்ரைஸா இருக்கே!
திரைப்படத்தில் கற்பழிப்பு காட்சி உண்மையானது என்று நினைக்கிறீர்களா? அது உங்களுக்குத் தெரியாதா? இதைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினார்களா? நான் யாரையும் குறிப்பிட்டு இதனை சொல்லவில்லை. த்ரிஷா நல்ல நடிகை இன்னும் பெரிய அளவில் வளரட்டும் என்று கூறினார். இவ்வாறு பேட்டி கொடுத்தும் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கவில்லை என பலரும் தங்களுடைய கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.