நான் தலைமறைவு ஆகிற ஆள் இல்லை…ஆஜராகிறேன்! – மன்சூர் அலிகான்

mansoor ali khan

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா பற்றி பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக திரையுலகமே கொந்தளித்தது. இதையடுத்து, நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்தது,

இதனையடுத்து, இன்று விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், அவர் முன் ஜாமின் கோரி மனு தாக்கலும் செய்திருந்தார். ஆஜராகாதது  குறித்து விளக்கம் கொடுத்திருந்த அவர் ” கடிதத்தில், 15 நாட்களாக தாடர் இருமலாக இருந்து நேற்று மிகவும் பாதிப்படைந்து, பேச மிகச்சிரமமாக இருப்பதால் நான் மருத்துவ சிகிச்சையில் இருந்து மீண்டு, நாளை தாங்களை சற்றிக்க, தாங்கள் குறிப்பிடும் நேரத்தில் வர அனுமதிக்குமாறு மிகத் தாழ்மையன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இதனை ஏற்று, ஆஜராக காவல்துறை ஒருநாள் அவகாசம் வழங்கியும் இருந்தது. இருப்பினும் திடீரென இன்று தான் ஆஜராக போவதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். அதன்படி,  மன்சூர் அலிகான் தான் இன்று  சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் இன்று மதியம் 2.30 மணிக்கு ஆஜராகிறேன் என கூறியுள்ளார்.

மேலும், அது மட்டுமின்றி இந்த விவகாரத்தில் அவர் தலைமறைவாகி விட்டதாக இன்று காலை செய்திகள் வெளியான நிலையில், நான் தலைமறைவாக ஆக கூடிய ஆள் இல்லை இன்று ஆஜராகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அவர் ஆஜரான பிறகு இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்