Categories: சினிமா

மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்து: த்ரிஷாவுக்கு குரல் கொடுத்த தெலுங்கு பிரபலம்.!

Published by
கெளதம்

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் கூறிய கருத்துக்கள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, த்ரிஷாவுக்கு ஆதரவாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி குரல் கொடுத்திருக்கிறார்.

நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியதற்கு லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், மஞ்சிமா மோகன், மாளவிகா மோகனன், சின்மயி, குஷ்பூ என பல பிரபலங்கள்  தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், தெலுங்கு பிரபலம் சிரஞ்சீவி தனது X தள பக்கத்தில், “நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷாவைப் பற்றி கூறிய சில கண்டிக்கத்தக்க கருத்துக்கள் என் கவனத்தை ஈர்த்தது. இந்த கருத்துக்கள் ஒரு கலைஞருக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுக்கும் அல்லது பெண்ணுக்கும் அருவருப்பானதாகவும், அருவருப்பானதாக  இருக்கிறது.

4 மணி நேரம் கெடு…நடிகர் சங்கத்துக்கு செக் வைத்த நடிகர் மன்சூர் அலிகான்!

இந்தக் கருத்துக்கள் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்பட வேண்டும். நான் த்ரிஷா மற்றும் இதுபோன்ற கொடூரமான கருத்துகளுக்கு ஆளாக வேண்டிய ஒவ்வொரு பெண்ணுடனும் நிற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர், இதற்கு நடிகை த்ரிஷா அவருக்கு, “நன்றி சிரு சார்” என்று பதிலளித்துள்ளார்.

இதுவரை இந்த சர்ச்சை கருத்துக்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கவில்லை. நேற்றைய தினம் த்ரிஷா பற்றி மன்சூர்அலிகான் பேசிய சர்ச்சை விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் இவ்வாறு பேசியதற்கு அனைவருடைய முன்னாடியும் மன்னிப்பு கேட்கவேண்டும் என நடிகர் சங்கம் கண்டன அறிக்கையை வெளியீட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் ”நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாக பேசவில்லை, த்ரிஷா பற்றி நான் பேசிய விவகாரத்தில் நடிகர் சங்கம் தவறு செய்துள்ளது. என்னிடம் எதை பற்றியும் கேட்காமல் எப்படி கண்டன அறிக்கை விடலாம்? 4 மணி நேரத்திற்குள் நடிகர் சங்கம் பதிலளிக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் நடப்பதே வேறு.

திரைப்படத்தில் கற்பழிப்பு காட்சி உண்மையானது என்று நினைக்கிறீர்களா? அது உங்களுக்குத் தெரியாதா? இதைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினார்களா?கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறியதால் பேசினேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

5 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

5 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

7 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

8 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

10 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

11 hours ago