Categories: சினிமா

என்னை மன்னித்துவிடு…த்ரிஷா விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டார் மன்சூர் அலிகான்!

Published by
கெளதம்

சர்ச்சை பேச்சு தொடர்பாக நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா பற்றி பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக திரையுலகமே கொந்தளித்தது. இதையடுத்து, நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

இதனையடுத்து, நேற்று விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் முன் ஜாமின் கோரி மனு தாக்கலும் செய்திருந்தார். பின்னர், உடல்நிலை சரியில்லா காரணத்தால் ஆஜராக கால அவகாசம் கேட்டிருந்த நிலையில், நேற்று மதியம் 2.30 மணி அளவில் சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் ஆஜராகிறேன் என கூறினார்.

ஜாலியா பேசினேன் த்ரிஷா தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க! மன்சூர் அலிகான் பேட்டி

அதன்படி அவர் ஆஜரான நிலையில், அவரிடம் 35 நிமிடங்களுக்கு மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்ததும் வெளியே வந்த மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றையும் கொடுத்தார். அதில் பேசிய மன்சூர் அலிகான் ”அந்த வீடியோவில் பேசியது நான் தான். அதனை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நான் ஜாலியாக பேட்டி கொடுத்தேன், நிஜமாக தவறான எண்ணத்தில் கொடுக்கவில்லை.

நான் ஜாலியாக பேசியதை த்ரிஷா தவறாக புரிந்து கொண்டார். மற்றபடி என்ன ஒரு அர்த்தமும் வைத்து நான் அப்படி பேசவில்லை. நான் அப்படி பேசியதால் நடிகை த்ரிஷா மனம் வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்” என்று கூறினார்.

இவ்வாறு கடந்த ஒரு வாரம் காலமாக இந்த விவகாரம் எங்கே பார்த்தாலும் தலைப்பு செய்திகளாக இருந்தும், இந்த சர்ச்சை கூறிய பேச்சுக்கு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கமால் இருந்து வந்த  நிலையில், இன்று இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்புக் கேட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்

தற்போது, நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் நேற்று ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்த நிலையில் இன்று “சக நடிகை த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு” என அறிக்கையை வெளியிட்டு மன்னிப்புக் கேட்டுள்ளார்.

மீண்டும் தள்ளிப்போன ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் – கௌதம் மேனன் வருத்தம்!

இது தொடர்பாக தனது அறிக்கையில், ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது.

எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு…இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக என்று குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

5 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

5 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

7 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

7 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

10 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

10 hours ago