Mankatha Re-release : மங்காத்தா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் படங்கள் செய்யவது ஒரு ட்ரெண்ட் ஆக மாறிவிட்டது என்றே கூறலாம். அந்த வகையில், சமீபத்தில் கூட பையா படம் கூட ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கிறது. அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன கில்லி படம் வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
விஜய் ரசிகர்கள் எல்லாரும் அந்த படத்தை கொண்டாட காத்து இருக்கும் நிலையில், தற்போது அஜித் ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன மங்காத்தா படமும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் மே 1-ஆம் தேதி அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் சினிமா கேரியரில் முதன் முதலாக அதிக வசூல் கொடுத்து மிகப்பெரிய ஹிட் ஆன திரைப்படம் என்றால் மங்காத்தா படத்தை கூறலாம். இந்த படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம்.
எனவே, விஜய் ரசிகர்கள் பலரும் கில்லி படத்தை கொண்டாட உற்சாகமாக இருந்த நிலையில், அஜித் ரசிகர்களும் பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் ரீ-ரிலீஸ் ஆகுமா என ஆவலுடன் காத்து இருந்த நிலையில், தற்போது மங்காத்தா படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளுடன் படத்தை கொண்டாட முடிவெடுத்துவிட்டார்கள்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…