ரஜினி பட வசூலை ஓட விட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’! தமிழ்நாட்டில் முரட்டு சம்பவம்!
ரஜினி நடிப்பில் வெளியான லால் சலாம் திரைப்படத்தின் வசூலை மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டில் மிஞ்சியுள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ்
இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் மக்களுடைய மனதை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம். இந்த திரைப்படத்தில் காலித் ரஹ்மான், கணபதி எஸ் பொதுவால், காலித் ரஹ்மான், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பல பிரபலங்கள் பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்!
அமோக வரவேற்பு
படம் வெளியான இரண்டு நாட்களில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், அதன்பிறகு தான் படம் வெளியாகி இருக்கிறது அருமையாக இருக்கிறது என மக்களுக்கு தெரிய வந்தது. எனவே, படத்தை மக்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சென்று பார்த்து வருகிறார்கள். படம் இன்னுமே பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது.
READ MORE – ஆள விடுங்கப்பா சாமி! கமல்ஹாசன் படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான்?
லால் சலாம் படத்தை மிஞ்சிய மஞ்சும்மல் பாய்ஸ்
வசூல் ரீதியாகவும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக படம் வெளியான ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 50 கோடி வசூலை செய்து இருந்தது. அதனை தொடர்ந்து படம் இந்த வாரம் தொடக்கத்திலே உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்தும் அசத்தியது.
Read more- மம்முட்டியை ஓரங்கட்டி ரூ.100 கோடி வசூலித்த மஞ்சும்மெல் பாய்ஸ்! மலையாளத்தில் புதிய சாதனை…
இந்த நிலையில், தமிழகத்தில் ரஜினி நடிப்பில் வெளியான லால் சலாம் படத்தின் வசூலை மஞ்சும்மல் பாய்ஸ் பின்னுக்கு தள்ளியது. லால் சலாம் திரைப்படம் தமிழகத்தில் 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் 22 கோடி வசூல் செய்து லால் சலாம் படத்தை பின்னுக்கு தள்ளி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இந்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இன்னுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.