மலையாள சினிமாவில் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் எல்லாம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகி கொண்டு வருகிறது. குறிப்பாக பிரேமலு, பிரம்மயுகம் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக 50 கோடிகளை தாண்டி இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
அந்த ஹிட் வரிசையில் தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் கொஞ்ச நேரத்துல திக் திக் என கூறி வருகிறார்கள்.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கொடைக்கானலுக்கு ஒரு விடுமுறைப் பயணத்தில் நண்பர்கள் குழு எதிர்பாராத சாகசங்களை எதிர்கொள்வதனை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை சிதம்பரம் எஸ் என்பவர் இயக்கி உள்ளார். படத்தில் காலித் ரஹ்மான், காலித் ரஹ்மான், கணபதி எஸ் பொதுவால், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 25 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் படம் 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…
சென்னை : கடந்த நவம்பர் 14ஆம் தேதியன்று சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான கங்குவா திரைப்படம் வெளியானது.…
மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் போரோபெக்ரா என்னும் கிராமத்தில் கடந்த 11ம் தேதி நடந்த துப்பாக்கி சண்டையில், நிவாரண முகாமை…
மதுரை : மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அரசு சுமார் 630 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது.…