Manjummel Boys: இயக்குனர் சிதம்பரத்தின் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் வெளியான 12 நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதன் மூலம், மலையாள சினிமாவில் ரூ.100 கோடி வசூலித்த 4வது திரைப்படமாக மஞ்சும்மல் பாய்ஸ் மாறியுள்ளது. இதற்கு முன்னதாக, 2016-ல் வெளியான மோகன்லாலின் ‘புலி முருகன்’ முதல் 100 கோடி வசூலித்த திரைப்படமாக உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, ‘லூசிபர்’ (2019) படமும், மூன்றாவது டோவினோ தாமஷின் 2018 திரைப்படம் (2023) படம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் வெற்றி கேரளாவைத் தாண்டி, பிற மொழிகளிலும் கூட பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் வசூலையும் குவித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் உற்சாகமான வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படம் 100 கோடி கிளப்பில் விரைவாக நுழைவதற்கு பங்களிப்பை அளித்துள்ளது என்றே சொல்லாம்.
இதில், இன்னோரு விஷயம் என்னவென்றால், மம்முட்டியின் ‘பிரம்மயுகம்’ படத்தை கூட இந்த படம் பீட் செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும். பிரம்மயுகம் இதுரை ரூ.60 கோடியை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், அந்த அளவுக்கு ஒரு மலையாள படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது, அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் ரூ.15 கோடியை கடந்துள்ளது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து முத்திரை பாதித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பிரேமலு திரைப்படம் ரூ.100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொது, இந்த படம் ரூ.85 கோடியை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமோக வரவேற்புக்கு படத்தின் இறுதி காட்சியில், “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது” என தொடங்கும் “கண்மணி” பாட்டு காதலுக்கு மட்டும் இல்லை நட்புக்கும் பொருந்துகிற மாதிரி புதிய கோணத்தில் ரசிக்கும்படி வைத்த இயக்குனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…