Aadujeevitham box office: மலையாளத்தில் மாபெரும் சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பிரித்விராஜின் ஆடுஜீவிதம் திரைப்படம் முந்தியுள்ளது.
இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆடுஜீவிதம் (The Goat Life). இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, சுனில் கே.எஸ் மற்றும் கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இப்படத்தில் நடிகர் பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடித்துள்ளார். மேலும் இதில், நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நேற்றைய தினம் உலக முழுவதும் வெளியான இப்படம் மலையாளத்தை தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.
ஆடுஜீவிதம் வெளியான முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இப்படம் ரூ. 7.45 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை வைத்து பார்க்கையில், இந்தியாவில் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது என தெரிகிறது.
புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய மலையாள நாவலான ஆடுஜீவிதத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ஒருவரது நிஜ வாழ்கையின் உண்மை சம்பவத்தின் கதையாகும். படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், சவூதி அரேபியாவில் ஒரு ஆட்டு பண்ணையில் ஆடு மேய்ப்பவராக அடிமைப்படுத்தப்பட்ட மலையாளி புலம்பெயர்ந்த தொழிலாளியான நஜீப்பாக நடித்துள்ளார்.
முதல் நாளில் உலக அளவில் ரூ.14 முதல் 15 கோடி வரை வசூலித்திருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 7.45 கோடி வசூல் செய்து மலையாள சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
ஆடுஜீவிதம் படத்துக்கு கிடத்த முதல் ஓப்பனிங், முதல் நாளில் ரூ 1.7 கோடி வசூலித்த நடிகர் டோவினோ தாமஸின் 2018-ஐ விடவும், ரூ. 3.3 கோடி வசூலித்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை காட்டிலும் சில மடங்கு அதிகமாகும்.
மஞ்சும்மல் பாய்ஸ் தற்போது உலகளவில் ரூ 212 கோடி வசூலித்து, மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. விரைவில் ஆடுஜீவிதம் திரைப்படமும் ரூ.100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…