manisha yadav and Seenu Ramaswami [File Image]
தென்மேற்கு பருவகாற்று, தர்மதுரை, மாமனிதன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சீனு ராமசாமி பிரபல நடிகையான மனிஷா யதாவிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பகீரான தகவல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அவருடைய இயக்கத்தில் உருவாகி இருந்த இடம்பொருள் ஏவல் திரைப்படம் நீண்ட ஆண்டுகள் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகை மனிஷா யாதவ் தான் தேர்வு செய்யப்பட்டு இருந்தாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வந்தபோது சீனு ராமசாமி மனிஷா யதவுக்கு பயங்கரமான டார்ச்சரை கொடுத்தாராம். இதனால் கண்கலங்கிய மனிஷா யாதவ் படப்பிடிப்பில் இருந்து கிளம்பி வந்தாராம். இந்த தகவல் குறித்த ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
கண்ணீர் விட்டு கதறல்! மனிஷா யாதவை டார்ச்சர் செய்த பிரபல இயக்குனர்?
இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த விவகாரம் பற்றி சீனு ராமசாமி “வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார் ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க… இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும்” என கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது நடிகை மனிஷா யாதவ் சீனு ராமசாமி பதிவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது சமூக வலைதள பக்கத்தில் ” ஒரு குப்பை கதை இசை வெளியீட்டு விழாவில் அங்கு எல்லாரும் வந்த காரணத்தால் நான் எல்லாருக்கும் நன்றி சொன்னேன். அந்த மேடையில் சீனு ராமசாமியும் அமர்ந்திருந்த காரணத்தால் அவருக்கும் நன்றி சொன்னேன்.
மற்றபடி 9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த எந்த விஷயத்தையும் மாற்றவே முடியாது. அப்போ என்ன சொன்னேனோ அதை தான் இப்போதும். என்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்ட ஒருவரிடம் இணைந்து நான் ஏன் வேலை செய்யப்போகிறேன்? சீனு ராமசாமி முதலில் உண்மையை பேசுங்கள் நான் எதையும் மறக்கவில்லை” என மனிஷா யாதவ் கூறியுள்ளார்.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…