மணிமேகலை vs பிரியங்கா : இதெல்லாம் ஒரு பிரச்சினையா? சீறிய ஜிபி முத்து!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜிபி முத்து மணிமேகலை vs பிரியங்கா இடையேயான பிரச்சினை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

priyanka deshpande vs manimegalai gp muthu

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக் குறைந்துள்ளது. இருப்பினும், இருவருக்கும் இடையேயான பிரச்சினை குறித்த விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இருவரும் இருந்த போது எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் வைரலாகி கொண்டும் இருக்கிறது.

அது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் பிரபலங்கள் பலரிடமும் இந்த விஷயங்கள் குறித்து வெளிப்படையாகவே கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. ஒரு சிலர் மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்தும், மற்றொரு புறம் சிலர் பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்தும் வருவது போல சில பிரபலங்கள் பொதுவான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அப்படி தான் ஜிபி முத்து தனது கருத்தைத் தெரிவித்தார். லவ் ஸ்டோரி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில், கலந்துகொள்ளவந்த ஜிபி முத்துவிடம் செய்தியாளர்கள் பலரும் விஜய் தொலைக்காட்சியில் பிரியங்கா vs மணிமேகலை இருவருக்கும் நடந்த பிரச்சினை குறித்து கேள்வி கேட்டனர்.

அதற்குப் பதில் அளித்த ஜிபி முத்து ” மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்டது ஒரு பிரச்சினையா? அவர்கள் இருவருக்கும் பிரச்சினை இப்போது வந்தால் நாளை ஒன்றாகச் சேர்ந்து விடுவார்கள். நாம் அதனைப்பற்றிப் பேச எந்த அவசியமும் இல்லை. இப்போது பிரச்சினை இருக்கும் பிறகு இருவரும் ஒரே நிகழ்வில் ஒன்றாக இருப்பார்கள்.

இருவருக்கும் இடையே என்ன பிரச்சினை என்பது பற்றி எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. தனிப்பட்ட முறையில், ஆனால், இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். இருவரும் டிஆர்பி ஏறுவதற்காகச் சண்டைகள் போடவில்லை” எனவும் ஜிபி முத்து தெரிவித்துள்ளார். இவருடைய பதிலைப் பார்த்த பலரும் நீங்கள் சொல்வது போலச் சீக்கிரம் இருவரும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியில் பார்க்கத்தான் காத்திருக்கிறோம் எனக் கூறிவருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
[File Image]
Robin uththappa
smriti mandhana SCORE
TN RAIN
MK stalin
pm modi mk stalin