மணிகர்ணிகா படத்தின் ஆக்ஷன் காட்சிகளை பற்றி கூறினார் !!!நடிகை கங்கனா ரனாவத்!!!!
ஜி ஸ்டுடியோஸ் மற்றும் கமல் ஜெயின் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் “மணிகர்ணிகா” ஆகும்.மேலும் இந்த படத்தை ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரனாவத் இணைந்து இயக்கியுள்ளனர்.ராணி மணிகர்ணிகாவாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.இந்த படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
மேலும் அங்கிதா லோகண்டே, ஜீஷூ சென்குப்தா, டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜனவரி 25-ஆம் தேதி உலகமெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கு ,இந்தி ஆகிய மும்மொழிகளில் வெளியாகிறது.
படம் பற்றி கங்கனா பேசுகையில் ,12 வருடங்களாக இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்காதது மிகவும் வருத்தமாக உள்ளதாக கூறினார்.மேலும் படம் ஆரம்பிக்கும் போது எனது எடை 50 கிலோ.ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது கங்கனாவின் உடல் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க உகந்ததாக இல்லை என்று கூறினார்.
தினமும் 10-12 மணி நேரம் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியதாக இருந்தது.இதில் நிறைய சிரமங்களை சந்தித்ததாகவும் கூறினார். ராணி லக்ஷ்மி பாய் கதாப்பாத்திரம் வழக்கமான கதாப்பாத்திரம் இல்லை அதை நடிக்க அதிக நம்பிக்கையும், அர்ப்பணிப்பும் தேவைப்பட்டது என்றும் கூறினார்.