அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்துவந்த ‘லவ்வர்’ (Lover) என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கடைசியாக அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “குட் நைட்” என்ற படத்தில் நடித்திருந்தார்.
குட் நைட் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் அறிமுக இயக்குனரிடம் கைகோர்த்துள்ள நிலையில், இந்த திரைப்படமும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது, லவ்வர் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தின் ட்ரைலரை வைத்து பார்க்கையில், காதலில் சிக்கிய நடிகர் மணிகண்டன் பின்னர் காதலியை பிரிந்து மீண்டும் ஒன்னு சேருவதும், இருவருக்குள் ஒரு ஒற்றமை இல்லாமல் சண்டை போடுவதும்போன்ற போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
மேலும், இது அர்ஜுன் ரெட்டி சாயலில் உள்ளது, முதலில் காதலிக்கும் பொழுது அமைதியாக இருக்கும் நடிகர் மணிகண்டன், காதலியை பிரிந்த பின், குடி- சிகரட் என Rugged ஆக மாறுகிறார். இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா என்பது தான் படத்தின் முக்கிய கதைக்களம்.
இந்த திரைப்படபடம் பிப்ரவரி 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. மணிகண்டனின் முதல் வெற்றிப் படமான குட் நைட் படத்தை ஆதரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் இணைந்து லவர் படத்தையும் தயாரிக்கின்றன. ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய , எடிட்டராக பரத் விக்ரமன் பணி புரிந்துள்ளார்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…