அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்துவந்த ‘லவ்வர்’ (Lover) என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கடைசியாக அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “குட் நைட்” என்ற படத்தில் நடித்திருந்தார்.
குட் நைட் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் அறிமுக இயக்குனரிடம் கைகோர்த்துள்ள நிலையில், இந்த திரைப்படமும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது, லவ்வர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டீசரை வைத்து பார்க்கையில், கல்லுரியில் நடைபெறும் காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இது அர்ஜுன் ரெட்டி சாயலில் உள்ளது, முதலில் காதலிக்கும் பொழுது அமைதியாக இருக்கும் நடிகர் மணிகண்டன், காதலியை பிரிந்த பின், குடி சிகரட் என Rugged ஆக மாறுகிறார். எப்பொழுதும், தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் மணிகண்டனின் இந்த காதல் படம் வெற்றி பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த திரைப்படபடம் 2024 காதலர் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. மணிகண்டனின் முதல் வெற்றிப் படமான குட் நைட் படத்தை ஆதரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் இணைந்து லவர் படத்தையும் தயாரிக்கின்றன. ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய , எடிட்டராக பரத் விக்ரமன் பணி புரிந்துள்ளார்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…