எனக்கும் கவினுக்கும் போட்டியா? மணிகண்டன் பளீச் பதில்!

manikandan about kavin

சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் பற்றி இவர்கள் அவர்களுக்கு போட்டி என்று ஒரு பேச்சு எழுந்து கொண்டே இருக்கும். குறிப்பாக ரஜினி – கமல், அஜித் -விஜய் ஆகியோருடைய படங்களுக்கு போட்டி என்று பேசப்பட்டு வருகிறது. இது பெரிய நடிகர்களுக்கு மட்டுமின்றி வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் இடையேவும் போட்டி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

அந்த வகையில், டாடா எனும் ஹிட் படத்தை கொடுத்த கவினுக்கும், குட்நைட் படத்தை கொடுத்த மணிகண்டனும் இடையே போட்டி இருப்பதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மணிகண்டனிடம் உங்களுக்கும் கவினுக்கு இடையே போட்டி என்று பேசப்படுகிறது அதற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் அளித்த மணிகண்டன் ” முதலில் இப்படி போட்டி என்று பேசுவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நானும் அவரும், சில முறை நேரில் சந்தித்துப் பேசி இருக்கிறோம். போட்டி என்றால் இரண்டு பேர் பெயர் இருக்கிறது என்பதில் கோபம் இருக்கிறது. நான் உதவி இயக்குனராக இருந்த காரணத்தால் தான் எனக்கு தெரியும்.

இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது.!

எனக்கு தெரிந்து என்னுடைய கண்ணனுக்கு எட்டி 1,000, 2000 கதைகள் இருக்கிறது. நம்ம ஊரில் 50 இயக்குனர்கள் இருப்பார்களா? அதில் ஒரு ஒரு இயக்குனர்களுக்கும் 5, 6 பேர் உதவி இயக்குனராக இருப்பார்கள். இதனை கணக்கு வைத்து பார்த்தால் ஒரு 250 பேர் இருப்பார்கள். அது இல்லாமல் குறும்படம் எடுப்பவர்கள் என்று தனியாக இருக்கிறார்கள்.

பல கதைகள் இருக்கிறது ஆனால் நடிகர்கள் 10 பேர் தான் இருக்கிறார்கள். அதில் இரண்டு இரண்டு பேர் தான் போட்டி என்று சொல்லவேண்டாம். நான் என்ன சொல்கிறேன் என்றால் 20 பேர் வரட்டும் 40 நடிகர்கள் வரட்டும். நான் சொன்னது போல 2,000 கதைகள் இன்னும் அரங்கேறாமல் இருக்கிறது. எனவே என்னைப்பொறுத்தவரை அந்த 40 பேரும் சினிமாவுக்கு வரட்டும்.

நாம் அப்படி தான் பார்க்கவேண்டும் அதனை விட்டு இவருக்கும் அவருக்கும் போட்டி என்று பார்க்கவே கூடாது. எனவே இது போன்ற பேச்சு தொடராமல் இருந்தால் நன்றாக இருக்கும்” எனவும் தெளிவான பதிலை மணிகண்டன் கூறியுள்ளார். இதனை பார்த்த பலரும் மணிகண்டனை பாராட்டி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்