ஜெய்பீம் பட பிரபலம் மணிகண்டன் அடுத்ததாக லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
மணிகண்டனை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ‘லவ்வர்’ படத்தின் முதல் விமர்சனம்!
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தை முன்னதாக பார்த்த பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் படத்தை பாராட்டி தனது விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பே படத்தை பார்த்த பத்திரிக்கையாளர்கள் பலரும் படம் நன்றாக இருப்பதாக கூறிவந்தனர். குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கூட படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது சினிமா பிரபலங்கள் பத்திரிகையாளர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.
தேசிங் பெரியசாமி
படத்தை பார்த்துவிட்டு பிரபல இயக்குனரான தேசிங் பெரியசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “நன்றாக எழுதப்பட்டு நேர்த்தியாக உருவாக்கப்பட்ட லவ்வர் திரைப்படத்தினை நான் பார்த்தேன். மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா ரெண்டு பேரும் கலக்கிட்டீங்க, பார்க்க புதுவிதமாக இருந்தது. நிச்சயமாக ஷாட் ஹிட்…வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…