தக் லைஃப் : இயக்குனர் மணிரத்னம் தக் லைஃப் படத்தை வழக்கமாக தன்னுடைய பாணியில் இல்லாமல் முழுக்க முழுக்க லோக்கலாக எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைஃப்’ படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்துள்ளது ஒரு பக்கம் எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறது என்றால் மற்றோரு பக்கம் படத்தில் சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பதிலும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.
படத்தின் டைட்டில் டீசரும் ஏற்கனவே வெளியாகியும் இருந்தது. படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் எந்த மாதிரி ஒரு படம் என்பது பற்றி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ‘தக் லைஃப்’ படம் மணிரத்னம் படம் மாதிரி இருக்கவே இருக்காதாம். தர லோக்கலான ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்குமாம். அப்படி தான் மணிரத்னம் தற்போது படத்தினை இயக்கி வருகிறாராம்.
வழக்கமாக இயக்குனர் மணிரத்னம் இயக்கம் படங்கள் எல்லாம் ஒரு A க்ளாஸிக் ஆக இருக்கும். அவர் எடுக்கும் படங்களின் வில்லன் கதாபாத்திரம் கூட அப்படி தான் ஸ்டாலிஷ் ஆன கதாபாத்திரமாக இருக்கும். ஆனால், தக் லைஃப் படம் அப்படி இருக்காதாம். முழுக்க முழுக்க தர லோக்கலாக இருக்குமாம். படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து எல்லா கதாபாத்திரமும் தர லோக்கலாக தான் இருக்குமாம்.
அந்த அளவிற்கு எல்லாரையும் கவரும் படி புதிய முயற்சியாக இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் எடுத்து வருகிறாராம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் இத நாங்க எதிர்பார்க்கல… என்று கூறி வருகிறார்கள். மேலும் ,விரைவில் தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…