மணிரத்தினம் படத்தில் இணைந்த புதிய நாயகி !
காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
மணிரத்தினத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பில், நாயகிகளில் ஒருவரான அதிதி ராவ் ஹிடாரியும் இணைந்துவிட்டார்.
இதில் அரவிந்த்சாமி, சிம்பு சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. தற்போது காற்று வெளியிடை ஹீரோயின் அதிதி ராவ் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.