மணிரத்னம் இரண்டு படத்துக்கு கூப்பிட்டாரு..மிஸ் ஆயிடுச்சு! அசால்ட்டாக சொல்லிய ஜீவா!
மணிரத்தினம் படத்தை இரண்டு முறை தவறவிட்டதாக நடிகர் ஜீவா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சென்னை : சினிமாவில் நடிக்கும் இளம் நடிகர்கள் ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. அதைப்போல, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நாம் நடிக்க வேண்டும் என்பது பல நடிகர்களுடைய கனவாக இருந்து வருகிறது. ஒரு சில நடிகர்களுக்கு அப்படியான வாய்ப்பு கிடைக்கும் இருப்பினும் வேறு படங்களில் கமிட்டான காரணத்தினால் நடிக்க முடியாமல் போக பிறகு பேட்டிகளில் கலந்து கொள்ளும்போது இதனை பற்றி பேசி பீல் பண்ணுவது உண்டு.
அப்படிதான் தமிழ் சினிமாவில் வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்த நடித்து தற்போது underrated ஆக்டராக இருக்கும் ஜீவா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது இயக்குநர் மணிரத்தினம் தன்னை இரண்டு படத்திற்கு அழைத்ததாகவும் அந்த இரண்டு படங்களும் நடிக்க முடியாமல் மிஸ் ஆகிவிட்டதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” எனக்கு இரண்டு முறை மணிரத்தினம் சார் கால் செய்து இரண்டு படங்களுக்கு அழைத்தார் ஒரு படத்தின் பெயர் எனக்கு தெரியவில்லை… செக்கச் சிவந்த வானமும் அல்லது ஓகே கண்மணியா என்று தெரியவில்லை. மற்றொரு படம் இப்போது அவர் எடுத்து வரும் தக் லைப் படம் தான். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அழைத்தார் அந்த படமும் மிஸ் ஆகிவிட்டது ” என கவலை இல்லாமல் அசால்டாக தெரிவித்துள்ளார்.
இவர் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் மணிரத்தினம் படத்தை மிஸ் செய்து விட்டு அப்படி நீங்கள் என்ன படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? எனவும் அப்படியே நடித்தாலும் அவருடைய இயக்கத்தில் வெளியாகும் படங்களில் நடித்தால் இன்னுமே உங்களுக்கு அதிகமான வரவேற்பு கிடைத்திருக்கும் அதனை விட்டுவிட்டு ஏன் முக்கியமான படங்களை மிஸ் செய்தீர்கள்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.