பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் தாக்கியவர் கைது.!

கத்தி குத்தால் காயமடைந்த நடிகர் சைஃப் அலிகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SaifAliKhan

மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை வீடு புகுந்து கத்தியால் குத்திய நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையை தொடர்ந்து, பாந்த்ரா காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்து பணிப்பெண்ணிடம் வாக்குவாதம் செய்த நபரை தடுத்தபோது சைஃப் அலிகான் மீது தாக்குதலில் ஈடுபட்ட அவர், கழுத்து, முதுகெலும்பில் கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். தற்போது சைஃப் அலிகான் மருத்துவமனையில்  சிகிச்சையில் உள்ளார்.

தாக்குதல் நடந்து 30 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சந்தேக நபரை கைது செய்து விசாரணைக்காக மும்பையில் உள்ள பாந்த்ரா காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் நடைபெற்றபோது திருடன் ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை, வீட்டில் பணிபுரியும் 56 வயதான எலியாமா பிலிப் என்ற செவிலியர் காவல்துறையிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்