ஓரினச்சேர்க்கை கதை… மம்முட்டி – ஜோதிகாவின் புதிய படத்திற்கு தடை!
மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் நடிகை ஜோதிகா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ‘காதல் – தி கோர்’ என்ற திரைப்படம் நாளை மறுநாள் (நவம்பர் 23 ஆம் தேதி) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளான குவைத் மற்றும் கத்தார் அரசாங்கங்களால் இந்த படத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
சமீபகாலமாக, இந்த இரு நாடுகளிலும் பல இந்திய திரைப்படத்தின் கதைக்களம், அவர்களின் கருத்தியல்களுக்கு பொருந்தாத காரணத்தால் தடை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ‘காதல் – தி கோர்’ படத்தின் கதையில் ஓரினச்சேர்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, குவைத் மற்றும் கத்தாரில் தடை செயப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் கொச்சியில் படத்தின் ப்ரோமோஷனுக்காக மம்முட்டி, ஜோதிகா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தார்கள்.
அப்போது, செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகர் மம்முட்டி, படங்களும் விமர்சனங்களும் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் மக்கள் தாங்கள் பார்க்கும் படத்தைப் பற்றி தங்கள் சொந்த கருத்தை வைத்திருப்பது மிகவும் முக்கியம். என்னை பொறுத்தவரை விமர்சனங்களை தடை செய்வதால் திரையுலகம் காப்பாற்றப்படும் என நான் நினைக்கவில்லை.
ஒரு படத்தை விமர்சனம் செய்வது வேறு அதைப்போல அந்த படத்தை கேலி செய்வது வேறு இரண்டுக்கும் தனி தனி அர்த்தங்கள் இருக்கிறது. எனவே, திரைப்பட விமர்சனங்களை தடை செய்வதால் திரையுலகைக் காப்பாற்ற முடியாது ‘ என்று நடிகர் மம்முட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
விமர்சனம் பண்றது வேற கிண்டல் பண்றது வேற! நடிகர் மம்முட்டி காட்டம்!
காதல் – தி கோர்
ஜியோ பேபி இயக்கத்தில், ‘காதல் – தி கோர்’ நடிகர் மம்முட்டி மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். மம்முட்டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு மேத்யூஸ் புலிக் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மம்முட்டி தன்பால் ஈர்ப்பாளராக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.