மாமன்னன் படத்தின் “ஜிகுஜிகு ரயில்” பாடல் வெளியானது.!

Maamannan Second Single

வெளியானது மாமன்னன் திரைப்படத்தின் 2வது பாடல்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘ராசாகண்ணு’ என்ற பாடல் சில நாட்கள் முன் வெளியான நிலையில், படத்தின் செகென்ட் சிங்கிள் பாடலான ‘ஜிகுஜிகு ரயில்’ எனும் பாடல் வெளியாகியுள்ளது.

 

இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைத்து அவரேபாடியுள்ளார். பாடலை கேட்ட பலரும் ஆஹா சூப்பரா இருக்கே என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

மேலும், மாமன்னன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்ர்க்கப்படுகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்