சமீபகாலமாக மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் எல்லாம் வசூல் ரீதியாகவும, விமர்சன ரீதியாகவும் ஹிட் கொடுத்து வருகிறது. அதன்படி, மலையாளத்தில் வெளியான பிரேமலு, பிரம்மயுகம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த ஹிட் வரிசையில் தற்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் இணைந்துள்ளது, மஞ்சுமெல் பாய்ஸ் பிப்ரவரி 22 அன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது.
அன்றிலிருந்து இப்படம் பற்றிய பேச்சுக்கள் இணையத்தில் அதிகமாக உள்ளது. படத்தின் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, கொடைக்கானலுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளும் கேரளாவின் மஞ்சும்மல்லைச் சேர்ந்த நண்பர்களில் ஒருவர் குணா குகைக்குள் துளைந்துவிட, அவரை தேடும் சர்வைவல் த்ரில்லர் கதையை வைத்து இப்படம் நகர்கிறது.
இந்நிலையில், இப்படம் கேரளாவில் மாபெரும் வரவேற்பை பெற்று உலக முழுவதும் ரூ.25 கோடியை கடந்துள்ளது. இப்போது, தமிழ்நாட்டிலும் இப்படத்தின் மோகம் அதிகரித்துள்ளது, இந்த படத்தை பார்த்துவிட்டு அமைச்சர் உதயநிதி புகழந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, தமிழ்நாடு திரையரங்கில் இப்படத்தின் ஷோவை அதிகரிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி, மலையாள திரைப்படம் தமிழ்நாடு வரை வெற்றி பெற்ற பெற்றிருந்தாலும், உலக நாயகன் கமல்ஹாசன் அதனை தவிர விட்டார் போல் தெரிகிறது. ஆம், இந்த படத்தில் வரும் குணா குகை காட்சிகளில் நடிகர் கமல்ஹாசன் 1991 ஆம் ஆண்டில் நடித்துவிட்டார். ஆனால், காதல் கதையை மைய்யாக வைத்து எடுக்கப்பட்ட, இந்த படத்துக்கு அந்த நேரத்தில் வரவேற்பு கிடைக்கவில்லை. நாளடைவில் தான் இந்த ‘குணா’ படம் குறித்து பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…