தமிழகத்தை ஆளும் ஆண் தாய் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! – சீனு ராமசாமி புகழாரம்.!
இயக்குனர் சீனு ராமசாமி தற்போது விஜய்சேதுபதியை வைத்து மாமனிதன் மற்றும் ஜிவி பிரகாஷை வைத்து இடி முழக்கம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மாமனிதன் திரைப்படம் வரும் மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளையராஜா&யுவன் இருவரும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
இந்த நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி தமிழக முதலவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்துள்ளார். அதற்கான புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது “என் திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்து ரசித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக இருக்கும் தமிழகத்தை ஆளும் ஆண் தாய் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வெளிவர இருக்கும் மாமனிதன்” இடிமுழக்கம் ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று
என் கவிதை புத்தகத்தையும் அதே சமயம் தமிழகத்தில் நோயும் இயற்கை சீற்றத்துக்கெதிராக அவர் ஆற்றிய போர்க்கால நடவடிக்கைகள் நினைவாக நன்றி கூறும் விதமாக நான் நேசித்து படித்த ஜான் ரீடு எழுதிய உலகை குலுக்கிய பத்து நாட்கள் நூலினை அவருக்கு தந்தேன். அவர்தம் வரலாற்று நூலின் முதல் பாகமான உங்களில் ஒருவன் நூலில் கையொப்பமிட்டு பரிசாக தந்தார் “மக்கள் அன்பன்” என் கண்ணே கலைமானே திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடன் இருந்து வாழ்த்தினார்.” என நெகிழ்ச்சியுடன் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.