சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மலையாள இயக்குனர் போக்சோவில் கைது!
மலையாள சினிமா இயக்குனர் ஜாசிக் அலி, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக உறுதியளித்து, 18வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், அந்த சிறுமி தனது தாயாரிடம் சொல்ல, அவரது தயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, பாலியல் புகாரின் அடிப்படையில் போலீசார் ஜாசிக் அலியை வலை வீசி தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், கோழிக்கோடு குருவங்காட்டைச் சேர்ந்த ஜாசிக் அலி, சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர், நடக்காவிலுள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டார். கொயிலாண்டி காவல் நிலைய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் எம்.வி.பிஜு தலைமையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அவர் அவர் போக்சோ குற்றச்சாட்டின் கீழ் பிடிபட்டார்.
சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அரை எடுத்து தங்கி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், அவர் போக்சோ குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இயக்குனர் ஜாசிக் அலி கடைசியாக இயக்கிய படம் பைனரி, இந்த ஆண்டு திரையரங்குகளில்வெளியாகி வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை ஜாசிக் அலி இயக்கியுள்ளார் மற்றும் கைலாஷ், ஜாய் மேத்யூ மற்றும் நிர்மல் பலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.